Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 6 பேர் கைது !

 


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சுங்கப் பிரிவினரால் சோதனையிடப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அணிந்திருந்த மற்றும் அவர்களின் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த 3.158 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அதிகாரிகள் கைப்ற்றியுள்ளனர். அத்தோடு அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 ஐபோன்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த ஆறு சந்தேக நபர்களில், 45, 48, 50 மற்றும் 51 வயதுடைய நால்வரும் அக்குறணையைச் சேர்ந்தவர்களாவர், இதேவேளை, 40 மற்றும் 41 வயதுடைய.நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த ஆறு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments