வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட திக்கோடை,தும்பாலை பிரதேசத்தில் பாம்பு தீண்டியதில் வயோதிபர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திக்கோடை தும்பாலை பிரேதசத்தை சேர்நத் (67) வதுடைய பொன்னுத்துரை மாணிக்கம் என்பவரே இவ்விபத்தில் பலியானவர்.
சம்பவ தினத்தன்று தனது மாடுகளை பராமரித்து விட்டு தனது வீட்டு அறையினுள் ஓய்வேடுத்திருந்த போது வீட்டு அறையினுள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்தருந்த நிலையில் உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் பிரேதத்தை கையளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments