இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், பெறப்பட்ட டீசல் கையிருப்பின் தரம் தற்போது சரிபார்க்கப்படுகிறது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விநியோகஸ்தர்கள் இருவரும் இன்று தேசிய எரிபொருள் உரிமத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டீசல் இருப்பு இன்று அதிகாலை கொழும்பு வந்ததாகவும், தற்போது தர மாதிரிகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய தினமே இரண்டாவது தொகுதி டீசல் வரும் என்றும், அதுவும் இந்த நடைமுறைப்படி சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 18-19 திகதிகளில் முதல் தொகுதி பெட்ரோல் நாட்டிற்கு வர உள்ளது. அத்துடன், மூன்று கப்பல்களுக்கும் தேவையான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் உரிமம்
இதேவேளை இன்று எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது தேசிய எரிபொருள் உரிமம் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று (16) மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தேசிய அடையாள அட்டை, வாகன உரிம எண், வாகன எண் (Vehicle Chassis number) மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட QR குறியீடும் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
0 comments: