அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இன்று மாலை ஐந்து மணிக்கு இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சபாநாயகரின் அழைப்பு
பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் தான் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதனைத் தொடர்து பதவி விலகுவதாக அவர் எடுத்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் அவசர கட்சித் தலைவர்கள் கூடடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: