Advertisement

Responsive Advertisement

கொழும்பில் இன்றும் தொடரும் போராட்டங்கள்: பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என அறிவிப்பு

 


தொடரும் போராட்டம் 

இன்றும் காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அரச தலைவர் மற்றும் பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கும் வரை தாமும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியை அடுத்து பிரதமர் ரணில் மற்றும் கோட்டாபயவும் பதவி விலக தயார் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புறநகர் பகுதிகளில்  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கொழும்பில் இன்றும் தொடரும் போராட்டங்கள்: பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என அறிவிப்பு | Sri Lanka Protest Today Colombo

இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பல பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

கொழும்பில் இன்றும் தொடரும் போராட்டங்கள்: பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என அறிவிப்பு | Sri Lanka Protest Today Colombo

Post a Comment

0 Comments