(வி.ரி.சகாதேவராஜா)
சமகால எரிபொருள் பிரச்சனையை சமாளிக்கும் முகமாக மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக மோட்டார் பூட்டிய துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்திருக்கின்றார் ஒரு இளைஞன்.
அவர் தான் காரைதீவைச் சேர்ந்த பரமலிங்கம் தரணிதரன் என்கின்ற இளைஞன் . இவர் மின்சார இலத்திரனியல் உபகரணங்களை பழுது பார்த்தல் தொழிலையும் செய்து வருகின்றார். சம்மாந்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவராவார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இன்று பிசியாகி விட்டார்..
துவிச்சக்கர வண்டியிலே மோட்டார் ஒன்றை பொருத்தி அதற்கான ஏனைய தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் பாவனையை ஒத்த இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்து இருக்கின்றார்.
அவரிடம் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்.
"இதற்குரிய மோட்டார் இணையதளத்திலிருந்து பெற்றுக் கொண்டோம். ஒரு மோட்டோருக்கு 16 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இதைவிட இரண்டு பேட்டரிகள் 20,000 ரூபாய். அவ்வளவுதான் இதை தயாரிப்பதற்கு தேவையானவை .
இந்த மோட்டார் பூட்டிய துவிச்சக்கரவண்டி நாள் ஒன்றுக்கு 60 கிலோ மீட்டர் தொடக்கம் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க கூடியது. 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.
சிலவேளை மோட்டார் பழுதாகினால் காலால் மிதித்தும் வந்து சேரக்கூடிய கட்டமைப்பு இருக்கின்றது.
ஒட்டி பொருத்தும் வேலைகளை கண்ணன் அண்ணா செய்து உதவினார்.
மேலும் நாடார் கடையில் இருந்து பழைய சிறிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி அதனை வடிவமைத்து வருகிறேன்.
இதனை கண்டுபிடித்த நாளிலிருந்து ஏகப்படியான தொலைபேசி அழைப்புகள் கிடைக்க பெற்று வருகின்றது. தேவையான அளவுக்கு செய்து கொடுக்கலாம் அதற்கான ஆலோசனை வழங்கலாம் "என்று தெரிவித்தார்.
0 Comments