அதிபர் போட்டியில் டலஸ் அழகப்பெரும
சிறிலங்கா அதிபர் பதவிக்கு தானும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை அடுத்து புதிய அதிபர் தெரிவு அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
பதில் அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை நியமிக்கும் வரை அவர் பதவியில் இருப்பார்.
புதிய அதிபர் தெரிவு
புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளை (16) நாடாளுமன்றம் கூடவுள்ளது.
அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஜூலை 20 ஆம் திகதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளை விரைவில் முன்னெடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் புதிய அதிபரை தெரிவு செய்வதை உறுதி செய்ய உத்தேசித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: