சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை சிறு அளவில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு கொள்கலனின் விலையை சிறு அளவில் அதிகரிக்க தீர்மானம்
சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 அல்லது அதனை அண்மித்த தொகையினால் விலையை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, கொள்கலன் ஒன்றின் விலையை 5100 அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
லிட்ரோ 12.5 கிலோகிராம் எடையுடைய கொள்கலன் ஒன்றின் விலை தற்போது 4860 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: