Home » » பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

 


க.பொ.த உயர்.தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக இலங்கை பரீட்சை ஆணையாளர் நாயகம் எம் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 44 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சையை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி புத்தூர் சோமஸ்கந்த மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பாடத்துக்கான எழுத்து பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் செய்முறை பரீட்சையில் தோற்றுவது கட்டாயமாகும்.

அனுமதி அட்டைகள் தொடர்பான தகவல்

பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலையின் அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு பதிவு தபாலிலும் அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் | Request Made Commissioner General Of Examinations

அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சாத்திகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் WWW.donetes.lk என்ற இணையதளத்தின் ஊடாக தமது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட் செலுத்துவதன் மூலம் அனுமதிகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

பரீட்சாத்திகள் தமக்கு வழங்கப்பட்ட திகதியில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக பரீட்சை நிலையத்திற்குள் உட்பிரவேசிக்க வேண்டும் என தெரிவித்ததோடு அனுமதி அட்டையின் பிற்பகுதியில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை உரிய வகையில் பின்பற்றி தவறாது செய்முறை பரீட்சையில் தோற்றுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |