Home » » தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு



2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |