எரிபொருள் கப்பல்கள்
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் தலா 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும், 40, 000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எரிபொருள் விநியோகம்
இன்று முதல் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் சுகாதார சேவையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிப்படவுள்ளது.
இதன்படி உந்துருளிகளுக்கு 6 லீற்றரும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றரும் விநியோகிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களுக்காக 20 லீற்றரும் சுகாதார சேவையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சுகாதார பணிக்குழாமினருக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், கடந்த இரண்டு வாரங்கள் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: