Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதியுடன் பிரதமரும் இன்று பதவி விலகாவிடின் முழுக்கொழும்பும் சுற்றி வளைக்கப்படும் -அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்

 


ஜனாதிபதியுடன் இணைந்து பிரதமர் இன்று (13) பதவி விலகாவிட்டால் இலட்சக்கணக்கான மக்களுடன் இன்று முழுக் கொழும்பையும் சுற்றி வளைப்போம் என போராட்டத்தின் தீவிர உறுப்பினர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.


போராளிகள் என்ற ரீதியில் தமக்கு இனி எந்தக் கோரிக்கையும் இல்லை எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இராஜினாமா இன்றே நடக்க வேண்டும் எனவும் அதற்காக இலட்சக்கணக்கான மக்கள் இன்று கொழும்புக்கு வரவுள்ளதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “மக்கள் போராட்டத்தின் இறுதி வெற்றி வரை போராட்ட களத்தின் செயல்திட்டம்” என்ற தலைப்பில் ஆறு நிபந்தனைகளுடன் கூடிய செயல்திட்டத்தை காலிமுகத்திடல் போராட்ட களப் பிரதிநிதிகள் நேற்று (12) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், வெகுஜன அமைப்பு ஆர்வலர்கள் மற்றும் சிவில் தலைவர்கள் முன்னிலையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments