Advertisement

Responsive Advertisement

கொழும்பில் மூடப்படும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

 


அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று (18) காலை Zoom ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்விச் செயலாளர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி

கொழும்பில் மூடப்படும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கல்வி நடவடிக்கைகளை நேரில் நடத்துவதா அல்லது இணையத்தில் நடத்துவதா என்பது குறித்து இந்த சந்திப்பின் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தணிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சும் முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments