Advertisement

Responsive Advertisement

கல்வி அமைச்சின் அறிவிப்பு

 


பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை சிறந்த அளவில் உள்ளது.

தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments