Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்

 


நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாடசாலை நேர நிறைவின் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் இந்தப் போராட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே, கள்வர்கள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்

இந்த நாட்டு மக்கள் கள்வர்களுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் கோட்டாபய ராஜபக்சவையும், ரணில் விக்ரமசிங்கவையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் காலம் தொலைவில் இல்லை எனவும் மஹிந்த ஜயசிங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments