Home » » மகிந்த பதவி விலகியவுடன் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

மகிந்த பதவி விலகியவுடன் இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

 


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், இடைக்கால அரசாங்கம் ஒன்று இந்த வாரத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர  நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியை மாற்றுவதற்கு உறுதியளித்தப்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ச, பதவி விலகினால், நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்துக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு குறித்து கருத்துரைத்த, தயாசிறி ஜெயசேகர, அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்பதில் இரண்டு தரப்பும் இணக்கம் வெளியிட்டன.

அத்துடன் பிரதமருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதிலும் இரண்டு தரப்புக்களும் உடன்பாட்டை எட்டின.

எனினும், அரசியலமைப்பை மீறி தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், மாகாணசபை ஒன்று நடந்துக்கொள்ளுமானால், அந்த மாகாண சபையை கலைக்கும் அல்லது இடைநிறுத்துவதற்கு நிறைவேற்று அரச தலைவரின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் இரு தரப்புக்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.

1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையின் அப்போதைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் வடக்கு - கிழக்கின் சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைப்பட்சமாக செய்யப்போவதாக எச்சரித்த உதாரணத்தை கருத்திற்கொண்டு இந்த இணக்கம் வெளியிடப்பட்டதாக தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |