இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாது என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர ஏனைய அனைத்து அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக பொது மக்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
0 Comments