Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பற்றி எரியும் பேருந்துகள்! அலரி மாளிகையின் வாயிற் கதவை உடைக்க முற்படும் மக்கள்: மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்


 புதிய இணைப்பு

அலரி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டவர்கள் மீது பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

இரண்டாம் இணைப்பு

அலரி மாளிகையின் வாயிற்கதவினை உடைத்துக் கொண்டு  ஆர்ப்பாட்டக் காரர்கள் உள்ளே செல்ல முற்படுவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.  

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக  மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். 

இந்தநிலையில் அலரி மாளிகையைச் சுற்றி தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சற்று முன்னர் பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அலரி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக  நுழைய முயன்ற போராட்டக் காரர்களை கலைப்பதற்கென்று இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் பேருந்துகள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments