நாளைய தினம் (07) காலை அனைத்து தொழிற்சங்க கூட்டணியும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பொரளை சந்தியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் இது குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட போராட்டம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பின் பின் வீடு செல்வது போல் அல்லாமல் ராஜபக்சவினர் பதவிகளை விட்டு செல்லும் வரைக்கும் தொடர் ஹர்த்தால் மூலம் இலங்கை முழுமையாக முடக்கப்படும் என்ற தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்கவுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டணிகள் குறிப்பிட்டுள்ளன.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு ஆடைகளுடன், கறுப்புக் கொடிகளை ஏந்திய வண்ணம் ஏராளமானோர் கலந்து கொண்டதுடன், பொரளை சந்தி முழுவதும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கன்றன.
0 comments: