Advertisement

Responsive Advertisement

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறையாகுமென அறிவிப்பு

 


நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்திருந்தன. 

இவ்வாறான சூழ்நிலையில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறையாகுமென அறிவிப்பு

இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறையாகுமென அறிவிப்பு

அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி மற்றும் நிறுவன அடையாள அட்டைகளுடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பணிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையின்றி மற்றும் அனுமதியின்றி ஏனையோருக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்து நடமாட அனுமதியில்லை எனவும், இவ்வாறு நடமாடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments