Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கலைந்து செல்லுமாறு அறிவித்த பொலிஸார்! கோட்டா கோ கம போராட்டக் காரர்கள் சற்று முன்னர் எடுத்த முடிவு

 


கடந்த ஒரு மாத  காலமாக காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கோட்டாக கோ கம போராட்டக் காரர்களுக்கு பொலிஸாரால் விசேட அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் அவரச காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதேபோல மே மாதம் 9ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

எனவே இந்த காலப்பகுதியில்  பொதுமக்கள், பொது இடங்களில் தரித்து இருப்பது, ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 


அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் இதன்போது அறிவித்துள்ளனர். ஷ

எனினும் கோட்டா கோ கம போராட்டக் காரர்கள் தாம் கலைந்து செல்லப் போவதில்லை என்றும், நாளை காலை ஏழு மணியுடன்  ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும், எனவே தாம் இங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களுக்குச் சென்று அமைதியான முறையில் போராட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

அத்துடன் நாங்கள் பயந்து இங்கிருந்து செல்லக் கூடாது என்றும், மூளையை பயன்படுத்தி வேலை செய்ய வேண்டிய காலம் இது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments