Advertisement

Responsive Advertisement

பலநாள் திருடன் தற்போது பிடிபட்டார்!

 


பல வீடுகள் மற்றும் வியாபாரத்தளங்களில் திருடிய நிலையில் தலைமறைவாகியிருந்த நைஜல் ஜகோடின் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜல் ஜகோடின் எனப்படும் நைஜல் கெளஸ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பலநாள் திருடன் தற்போது பிடிபட்டார்!

கைது செய்யப்படும் போது அவரிடம் கைக்குண்டு, கத்தி மற்றும் ஹெரோயின் போன்றவை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நைஜல் ஜகோடின் கொழும்பில் உள்ள சில முன்னணி கடைகளிலும் எங்கிலிகன் பாதிரியார் ஒருவரின் வீட்டிலும் திருடியுள்ளார்.

அவர் ஒரு பெண்ணையும் மிரட்டி தாக்கியுள்ளார். எனினும், அவரை நீண்ட நாட்களாக பொலிஸாரால் கண்டுபிடித்து கைது செய்ய முடியவில்லை. 

Post a Comment

0 Comments