Advertisement

Responsive Advertisement

சஜித்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவல்! கட்சி தாவத் தயாராகும் உறுப்பினர்கள்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தயங்கி வருவதாகவும் இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்குள் அவருக்கு எதிரான நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், “புயல் வீசும் கடலில் கப்பலை செலுத்த அஞ்சும் நபர் கப்பலின் மாலுமி பதவிக்கு மட்டுமல்ல கப்பலை கூட்டி பெருக்கி துப்பரவு செய்யவும் தகுதியற்றவர்” என முன்னாள் அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்தள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் அவசியம் என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments