Home » » நாளைய தினம் CEB கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க PUCSL மறுத்துவிட்டது

நாளைய தினம் CEB கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க PUCSL மறுத்துவிட்டது

 


நாளைய தினம் CEB கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க PUCSL மறுத்துவிட்டது. நுகர்வோர் வசதிக்காக 5 மணிநேரத்திற்கும் (பகல் நேரம் 3/4 மணிநேரம் மற்றும் இரவு 10 மணிக்கு முன் 1/2 மணிநேரம்) குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது - ஜனக ரத்நாயக்க, தலைவர் PUCSL

மேலும்...

இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்த மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குறித்த இக்கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதன்படி, நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 - 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 - 2 மணித்தியாலங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |