இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் முகநூலில் இட்டுள்ள பதிவில்,
ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட கடினமானதாக காணப்படுகின்றது. மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி என்னதேவையோ அதனை கேட்கின்றனர்.
சிலர் தங்கள் குரல் வெளிப்படுவதற்காக மனக்கசப்பு மற்றும் சீற்றத்துடன் செயற்படும் அதேவேளை ஏனையவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.
மக்களை செவிமடுப்பதும்,அழிவை ஏற்படு;த்தும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சிநிரல்களை ஒதுக்கிவைப்பதும்,நாட்டின் சிறந்த நலனை கருத்தில்கொண்டு செயற்படுவதுமே சரியான தீர்வாகும்.
மக்கள் எதிரிகள் இல்லை, இலங்கை என்பது அதன் மக்கள் நேரம்வேகமாக ஒடுகின்றது மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவேண்டும் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
0 Comments