Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆபத்தான நிலையில் நாட்டின் வங்கித்துறை! இந்திய கடன் சில வாரங்களுக்கே நாட்டை காப்பாற்றும் - ரணில்

 


இந்தியாவின் கடனுதவி இலங்கையை ஐந்து அல்லது ஆறு வாரங்களுக்கே காப்பாற்றும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக மாற்றப்பட்டு அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது.

அரசாங்கத்தின் அதிகார கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்வதால் பொருளாதார நெருக்கடி மேலும் குழப்பமானதாக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி போன்றவை ஒரு திசையிலும், ஏனையவை இன்னொரு திசையிலும் பயணிக்கின்றன.

நாட்டின் வங்கித்துறை ஆபத்தான நிலையில் உள்ளது. இந்திய கடனுதவிகள் நாட்டை சில வாரங்களிற்கே காப்பாற்றும் என குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments