Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்- கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!


 நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட வேலைத்திட்டத்தின் முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளராக கருதப்படும் திசர அனுருத்த பண்டாரவை நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்றவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிவில் உடையில் வீட்டுக்குச் சென்றவர்கள் முகத்துவாரம் காவல் நிலையத்தின் அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திசர அனுருத்த பண்டாரவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், முகத்துவாரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விசாரித்துள்ளனர்.

எனினும் அப்படியான எவரும் கைது செய்யப்படவில்லை என பொறுப்பதிகாரி தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர், முகத்துவாரம் காவல்துறையின் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இன்று தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments