Advertisement

Responsive Advertisement

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உச்சம் தொடும் எரிவாயு!

 


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ​ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments