றம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த சாமிந்த லக்ஷான் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் சம்பவத்தை நேரடியாக பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
“குறுக்கு வீதி ஒன்றில் ஓடிக்கொண்டிருந்த போது, சாமிந்த லக்ஷான் மீது பின்னால் இருந்து சுடப்பட்டார்” என நீதவான் விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த ஒருவர் கூறியுள்ளார்.
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கற்கள் விழுவதைத் தடுப்பதற்கு முயற்சித்து திரும்பும் போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட உத்தியோகத்தரை தாம் அடையாளம் கண்ட போதிலும் தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதால், அதனை கூற முடியாது என சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
0 comments: