நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவ மாணவியரை அழைப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களில் தவணைப் பரீட்சை நிறைவடைந்துள்ள காரணத்தினால் தரம் 6 முதல் 13 வரையிலான மாணவ மாணவியரைப் பாடசாலைக்கு அழைப்பதற்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு மின்வெட்டு காரணமாக நாளை முதல் விடுமுறை வழங்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.
இதேவேளை, மேல், மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் பரீட்சை நடைபெறும் மாணவ மாணவியர் மட்டுமே பாடசாலைகளுக்கு அழைக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்து ஏனைய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments