Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஒரு வார கால அவகாசம்

 


நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அதை்து தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இதற்கு ஒரு வார காலத்திற்குள் பதிலை வழங்குமாறும் அவ்வாறில்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வேண்டி ஏற்படும் என்றும் சுதந்திர கட்சி கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments