பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இரவு அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பில் நெருக்கடியான தருணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால் புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்தார்.
இருப்பினும், இக் கலந்துரையாடலில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றும், புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கூறினார்.
அரச தலைவரின் இராஜினாமாவால் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments