முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பஷில் ராஜபக்ஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் டுபாய் நோக்கி பயணித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும், பஷில் ராஜபக்ஸவின் நெருக்கமானவருமான மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments