களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் குருக்கள்மடத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் மு.ரதீசன் என்பவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது மட்டு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் தான் செலுத்திச் சென்ற மோட்டர் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயத்துக்கு எதிரே வீதியோரமிருந்த மின்சாரத் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
ஆழ்ந்த அனுதாபங்கள் தம்பி
0 Comments