தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் கடும் சிரமங்களால் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் பற்றி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் , அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதோடு தேர்தலில் மக்கள் விரும்பும் ஆட்சியை அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments