( அஸ்ஹர் இப்றாஹிம்)
கிண்ணியா பிரதேச செயலகத்தின் மூன்றாவது சமுர்த்தி வங்கியான சூரங்கல் சமுர்த்தி வங்கியானது அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி எஸ். சுதீஸ்னர் , கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி , கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மட் முஜீப் , கிண்ணியா பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ. முஹ்சீன் , கிண்ணியா, குறிஞ்சாக்கேணி மற்றும் சூரங்கல் வங்கி முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு முகாமையாளர், நிருவாக முகாமையாளர், குறுநிதி, மற்றும் கருத்திட்ட முகாமையாளர், பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 comments: