கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அருகில் பெருந்திரளான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். பிரதமரின் இல்லத்திற்கு எதிரில் ஒன்றுக் கூடியுள்ள மக்கள் அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகி செல்ல வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு எதிரில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லம் அமைந்துள்ள பகுதியில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில், கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர், யுவதிகளாகவும் நடு தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
0 Comments