Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் கடனுதவியில் பெறப்பட்ட எரிபொருள் முடியும் தருவாயில்:மின் வெட்டு நேரம் அதிகரிக்கலாம்

 


இந்திய கடன் யோசனை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட எரிபொருள் இந்த மாதம் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்து விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கடன் யோசனை திட்டம் மூலம் பெறப்படும் எரிபொருளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் வரவுள்ளன எனவும் இதனடிப்படையில் மே மாதம் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை பற்றி இதுவரை தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், மே மாதம் முதல் முழு நாடும் ஸ்தம்பித்து முழு நாடும் இருளில் மூழ்கும் நிலைமை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே கழிவு எண்ணெய் கையிருப்பு முடிந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை மேலும் அதிகரிக்க நேரிடும் எனவும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments