Advertisement

Responsive Advertisement

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்


ரம்புக்கனை கலவரத்தின் போது, பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments