Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் - இன்றும் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கள்

 


இலங்கை முழுவதும் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரையிலும் சில பிரதேசங்களில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி பதவி விலகும் வரை தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments