Advertisement

Responsive Advertisement

கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப 9ஆம் திகதி கொழும்புக்கு வரும் பொதுமக்கள்- எதிர்கட்சி

 


எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்புக்கு வரும் பொதுமக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கே வரவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டை முன்கொண்டு செல்வதற்காக தமது கட்சி தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், அரசியலமைப்பின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிச்செல்லவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

நாட்டை முன்னேற்றுவதற்கு ஒன்றுபடவேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments