கண்டியில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
கண்டி - கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புற பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இத் தீ விபத்தில் மூவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீப்பரவல் காரணமாக நான்கு வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மகள் மற்றும் ஒரு இளைஞன் பலியாகியுள்ளதுடன் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான கரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் காவல்துறையினர் தமது விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

.jpeg)
0 Comments