Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!

 


தாள் தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான தாள்களை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்ட அட்டவணையின்படி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மேலும், தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமை போன்று நடைபெறும் என கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments