இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Tharmalingam Siddharthan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலானர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஐ.நா.வுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.
ஒன்றிணைந்து கடிதம் அனுப்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என்பதனாலேயே தனியாகவே கடிதங்களை தமிழ் பேசும் கட்சிகள் அனுப்பவுள்ளன.
இதேவேளை அரசாங்கத்திற்கு ஆதரவாக விடயங்களை திரட்டும் முகமாகவே அமைச்சர்கள் அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் வடக்கில் நீதிச் சேவை முகாம்களை மேற்கொண்டனர்.
அதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்டுவதற்கு பெரும் முயற்சியை அவர்கள் எடுத்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: