Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தடுப்பூசியால் பாலியல் பிரச்சனைகள் ஏற்படுமா? வைத்தியர் தகவல்


 பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் பரவியுள்ள தவறான கருத்துக்கள் குறித்து பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன கருத்து தெரிவித்தார்.


“கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வகையான பாலியல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் ஆண்மைக்குறைவு அல்லது மலட்டுத்தன்மை போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தடுப்பூசியால் ஏற்படுகின்றன என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை ” என்றார்.

இதேவேளை, கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments