Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி 45 வீதமானவர்கள் ஏற்றிக்கொண்டுள்ளனர்

 


(வரதன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது தடுப்பு ஊசி 45 வீதமானவர்கள் ஏற்றிக் கொண்டுள்ளனர். இதனை வரும் மாதத்தில் 80 வீதமானவர்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 23 ஆயிரம் நோயாளர்களை உருவாக்கியதுடன் 307 மரணங்களை ஏற்பட காரணமாக அமைந்த இந்த வைரஸ் நோய் தற்போது எமது மாவட்டத்தில் இந்த வைரஸ் நோய் தற்போது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன் நோயின் தாக்கம் உயிர் இழப்பு வீதம் குறைவாக இருந்த போதிலும் இதன் பரவும் வேகம் அதிகமாக காணப்படுகின்றது.எனவே இதனை தடுக்க பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை இருக்கமாக கடைபிடிப்பதுடன் 3வது தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்ளவேண்டும்.

இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க நாம் எமது மாவட்டத்தில் 14 சுகாதார வைத்தியபிரிவில் 3வது தடுப்பு ஊசி ஏற்றிகொள்ளும் வைத்திய மையங்களை அமைத்து 3வது தடுப்பு ஊசி ஏற்றும் செயற்ப்பாட்டினை வேகமாக முன்னெடுத்து வருகின்றேம்.இருந்தாலும் வேலை நிறுத்தம் மக்களின் அசமந்த போக்கு இதனை மந்தமாக கொண்டு செல்லுகின்றது.எனவே பொதுமக்கள் இதனை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments