Home » » இறக்காமத்தில் முறுகல் நிலை

இறக்காமத்தில் முறுகல் நிலை



( றம்ஸீன் முஹம்மட்)

அம்பாறை , இறக்காமம் நாற்சந்தியில் சுற்றுவட்டம் ஒன்றினை அமைப்பதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்று ( 3 )  முறுகல் நிலையொன்று  ஏற்பட்டது.
இறக்காமம் நாற்சந்தியில் சுற்று வட்டம் ஒன்றினை அமைப்பதற்கு  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கடந்த 2017 ஆம் ஆண்டு ஊர் மக்களின் வேண்டு கோளின் அடிப்படையில் சுற்று வட்டம் ஒன்றினை அமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் கடந்த 2017ஆம்  ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு இன்று வரை தற்காலிக சுற்றுவட்டம் ஒன்றினை அமைத்து நடைமுறையில் வந்த நிலையில் திடீரென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள்   நேற்று  குறித்த சுற்றுவட்டத்தை உடனே அகற்ற வேண்டும் என கூறிய போது ஊர் பொது மக்கள் அவ்விடத்தில் கூடி பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாரிய வாக்குவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி குழுவினர் நேரில் வந்து குறித்த விடயம் தொடர்பாக கேட்கும் போது மக்கள் இவ்வாறு பதிலளித்தனர்
குறித்த சுற்று வட்டம் அமைக்க சுமார் 150 பேருக்க மேல் கையெப்பம் இட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதேச செயலாளருக்கும் இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவருக்கும் இக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
 ஐந்து வருடங்களுக்கு மேல் இவ்விடத்தில் சுற்று வட்டம் அமைக்கப்பட்டுள்ளதால் பாரிய விபத்துகள் ஏற்படு வதை தடுத்து வருகிறது,
 அத்தோடு குறித்த சுற்று வட்டத்திற்கு தடையாக உள்ள கட்டிடங்களை உடன் அகற்றி இந்த சுற்று வட்டத்தை அழகுபடுத்த வேண்டும் எனவும் ஒரு சில சுய நலவாதிகளுக்கு இவ்விடத்தை நாங்கள் தாரைவார்த்துக் கொடுக்க முடியாது என பொதுமக்கள்  தெரிவித்திருந்தார்கள்.
மேலும் இவ்விடத்தில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுத்து இறக்காமம் சந்தியை அழகுபடுத்தி தாருங்கள் என பொது மக்கள் போலீசாரிடம் முறையிட்டனர்.
இதன் பின்னர் பொலிசார் குறித்த இடத்திற்கு ஒரு சுற்று வட்டம் கட்டாயம் தேவை என்றும் இதற்கு மிக விரைவில் ஒரு நிரந்தர சுற்று வட்டத்தை அமைத்து தருவதாகவும் போலீசார் மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து மக்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |