Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலக வரைபடத்திலிருந்து இலங்கை இல்லாமல் போகும்! முன்னாள் அரச தலைவர் எச்சரிக்கை

 


இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணையா விட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர். நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது. 

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது. நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ளது. 

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை. ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments