இலங்கை ஆசிரியர் சங்கம் பிரதி பரீட்சை ஆணையாளருடன் வினாத்தாள்கள் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக முறையீடு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை (07.02.2022)ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் ( திங்கட்கிழமை)நடைபெற்ற இனணந்த கணித பகுதி - A க்கான வினாத்தாள் பகுதி ஒன்று நேரம் தாழ்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் விசனமடைந்துடன், இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண இனைப்பாளரான பொன்னுத்துரை உதய ரூபன் அவர்களுடன் தொடர்பு கொண்டு இவ்விடயத்தை கூறினர், இவ்விடயம் தொடர்பாக பிரதி பரீட்சை ஆணையாளருடன் பேசிய இனணப்பாளர் சம்மந்தப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ,இது தொடர்பாக விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டினார். மேலும் இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுடன் தொடர்புகளை மேற்கொண்ட பிரதி பரீட்சை ஆணையாளர், சம்மந்தப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள் தற்காலிகமாக பரீட்சைக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
0 comments: