Advertisement

Responsive Advertisement

( அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி” சவால்களை முறியடிக்கும் வளமான நாளை ”



( அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி” சவால்களை முறியடிக்கும் வளமான நாளை ” எனும் தொனிப்பொருளில்  கல்முனை , சாய்ந்தமருது , காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பாடசாலைகள் , அரச நிறுவனங்கள் , கோவில் , பள்ளிவாசல் தேவாலம் மற்றும் பன்சல போன்ற சமயத்தலங்கள் , தனியார் நிறுவனங்கள் , வர்த்தக நிலையங்கள் , எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  , பொலிஸ் , இராணுவ காவல் நிலையங்கள் , வாகனங்கள் மற்றும் வீடுகளில்  இப்போதிருந்தே தேசியக்கொடி பறக்கவிடும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள சில வர்த்தக நிலையங்களிலும் நடைபாதைகளிலும் தேசியக் கொடி விற்பனை களை கட்டியுள்ளது
பல விதமான  அளவுகளில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுவதால் அவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுதந்திர தின நிகழ்வுகளின் போது நாடாளவிய ரீதியில் மரம் நடும் வேலைத்திட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் சுதந்திர தினத்தை எளிமையானதாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதனடிப்படையில் இலங்கை சனநாயக குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ளது. அதிமேதகு  ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments